Connect with us
Bhanupriya

News

படத்தை எடுத்தார் மார்க்கெட்டை இழந்தார்! கன்னக்குழி அழகி பானுபிரியாவின் சீக்ரெட் தகவல்.!

நடிகை பானுபிரியா ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து கலக்கி வந்த நிலையில், சமீபகாலமாகவே ஒரு சில படங்களில் முக்கியமா கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்த காலத்தில், மார்க்கெட் இழந்ததற்கு காரணம் என்னவென்பதை பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Bhanupriya

Bhanupriya [Image Source : File Image ]

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் “நடிகை பானுபிரியா மெல்ல பேசுங்கள் படத்தில் அறிமுகமானவர். பாரதி வாசு என்ற பெயரில் சாதான பாரதி இந்த மெல்ல பேசுங்கள் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை பானுபிரியா ஆளு கருப்பு ஆனால், அவருடைய கண்கள் அழகாக இருக்கும்.

கருப்பாக இருந்தாலும் பானுபிரியாவின் முக வசியம் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். மெல்ல பேசுங்கள் படத்தை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தார். ஆனால் ஒரே ஒரு சொந்தப்படம் எடுத்தார் அதோடு ஆளே காணாமல் போய்விட்டார். விஜயகாந்தை வைத்து அவர் ஒரு படம் எடுத்திருந்தார். அந்த படம் லாபம் ஈட்டவில்லை என்றாலும் அவரை ஒரு தயாரிப்பாளராக ஆக்கியது.

இதையும் படியுங்களேன்- உங்கள பாத்தாலே ஹார்ட் பீட் எகிறுது! ரகுல் ப்ரீத் சிங்கின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

அவருடைய தம்பி விளம்பர படம் எடுக்கிறோம் என்று பானு பிரியாவின் பணத்தை காலி செய்தார். அது மட்டுமில்லை, பானுபிரியாவின் உடலில் தொய்வு ஏற்பட்டது. ஒரு நடிகைக்கு மார்க்கெட் நன்றாக இருந்தது என்றால் அவர் தன்னுடைய உடலை சரியாக வைத்து கொள்ளவேண்டும். ஆனால், பானுபிரியா உடலை சரியாக கவனிக்காததால் பானுபிரியாவுக்கு மார்க்கெட் போனது.

Bhanupriya

Bhanupriya [Image Source : File Image ]

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தாள் அவர் சீரியல்களிலும் சிலவற்றில் நடித்தார். ஆனால், அவருக்கு திரும்பவும் மார்க்கெட் வரவில்லை. இதன் காரணமாகவே நடிகை பானுபிரியா சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் இப்படி பேசியதை வைத்து உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது இப்படியெல்லாம் நடிகைகளை பற்றி பேசாதீர்கள்” என கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top