Connect with us

Movies

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ…

நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. அதிலும், தமிழ் நாட்டில் மட்டும் 500 திரைகளில் வெளியாகியுள்ளதாம். இயக்குனர் கல்யாண் கிரிஷன் இயக்கிய ‘அகிலன்’ திரைப்படம் துறைமுகத்தை கட்டுப்படுத்தும் ஒரு சட்டவிரோத வியாபாரியைப் பற்றி விவரிக்கிறது.

JayamRavi in Agilan From March 10 [Image Source: Twitter]

மேலும், இந்த படத்தின் அதிரடி காட்சிகள் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, தலைப்பிற்கு ஏற்றார் போல் அகிலன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

JayamRavi - Agilan

JayamRavi – Agilan [Image Source: Google]

அகிலன் விமர்சனம்:

துறைமுகத்தில் நடக்கும் அனைத்து சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கும் ஆணிவேராக நிற்கிறார் அகிலன் (ஜெயம் ரவி). கடத்தல் செய்யும் தலைவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்து, பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவரை நாடு கடத்தும் பணி அகிலனுக்கு வழங்கப்படுகிறது.

JayamRavi - Agilan

JayamRavi – Agilan [Image Source: Google]

இதற்கிடையில், நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் அகிலனின் ஆட்டத்தை நிறுத்த நினைக்கிறார். பலவித முயற்ச்சிகளை மேற்கொண்டு அகிலனை  கைது செய்ய முயற்சிக்கிறார். இறுதியாக, அகிலன் அந்த வேலையை முடித்தாரா? அதன் பின்னணியில் அவரது மாஸ்டர் பிளான் என்ன? என்பது தான் படத்தின் கதை.

இதையும் படிங்களேன்- புதுப்பட ரிலீஸ் தாமதம்.! தயாரிப்பாளர் மீது நிவின் பாலி குற்றச்சாட்டு…

Agilan movie

Agilan movie [Image Source: Twitter]

இயக்குனரின் படத்தின் திரைக்கதை சில திருப்பங்களுடன் நம்மை பார்க்க வைத்தாலும். சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை கதையுடன் நன்றாக ஒத்துப்போகிறது. ஆனால், படத்தில் ஒரு டூயட் அல்லது ரொமான்ஸை எதிர்பார்க்க முடியாது. அதன்படி, பிரியா பவனின்சங்கருக்கு அதிக திரைகள் கொடுக்கவில்லை. ப்ரியா பவானியை விட தன்யா ராஜேந்திரன் நடிப்பு வெகுவாக எடுத்து காட்டுகிறது. மொத்தமாக படத்தை ஜெயம் ரவி எடுத்து சென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

Continue Reading
To Top