தலைவரே..! உங்க ஸ்டைல் மாறவே இல்லை.! தெறிக்க விடும் ஜெயிலர் வீடியோ…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் இந்த வாரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதையும் படத்தில் இருப்பதையும், நேற்று அவரது லுக்கை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜெயிலரின் தயாரிப்பாளர்கள் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 12 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ரஜினியின் ஸ்டையில் இன்றும் கூட மாறாமல் அப்படியே இருக்கிறது கண்ணடி போட்டுகொண்டு மாஸாக நடிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer ????
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs
— Sun Pictures (@sunpictures) November 18, 2022
இதற்கிடையில், கடைசியாக ‘லைகர்’ படத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன், இன்று சென்னையில் நடந்து கொண்டிருக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். மேலும், படப்பிடிப்பில் தளத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்துடன் அவர் நடித்த படையப்பா படத்தை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்களேன் – என்னது….! நடிகை நித்யா மேனன் மீண்டும் கர்ப்பமா? வெளியான அதிர்ச்சி புகைப்படம்…
View this post on Instagram
சிறையின் பின்னணியில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு சும்மர் விடுமுறையில் திரையரங்குகளில் வெளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
