Connect with us

Movies

ட்விட்டர் விமர்சனம்: வெற்றிமாறனின் அடுத்த சம்பவம்.! விடுதலை திரைப்படம் எப்படி இருக்கு?

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது, இப்படம் உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழில் அதிக கால அவகாசம் எடுத்து இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படங்களில் ‘விடுதலை’-யும் ஒன்று. விடுதலை படத்திற்கு தணிக்கைக் குழுவிடம் இருந்து ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

படத்திற்கான காலை காட்சிகள் காலை 8 மணிக்கு தொடங்கியது, FDFS-ஐ பார்க்க ரசிகர்கள் பல திரையரங்குகளில் குவிந்ததால் ஹவுஸ்ஃபுல் ஆகியது.  இப்போது, படத்தை பார்த்துவிட்டு சில நெட்டிசன்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளனர் அதை பற்றி என்பதைப் பார்க்கலாம்.

இயக்குனர் வெற்றி மாறன் தான் திறமையான இறுக்குனர் என நிரூபிக்க இந்த படத்தை வழங்கியுள்ளார் என்று சொல்லலாம், ஏன்னென்றால் இந்த படத்துக்கு அதிகமாக பாசிடிவ் விமர்சனங்கள் வந்துள்ளது. அதாவது, ஹீரோவாக உருவெடுத்துள்ள காமெடி நடிகர் சூரி, படத்தில் இளம் போலீஸ் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

விஜய் சேதுபதியும் தனது கதாபாத்திரத்தின் மூலம் ஈர்க்கிறார். விடுதலை இரண்டு பாகம் என்பதால், முதல் பாகத்தில் அவருக்கு குறைவான திரைப் பகுதியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்ம், சூரிக்கு ஜோடியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இளையராஜா தனது பாடல் மற்றும் பின்னணி இசை மூலம் ரசிகர்களை உற்சாகமடைய செய்தார், ஒட்டுமொத்தமாக ‘விடுதலைப் பகுதி 1’ தொடக்க நாளில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Continue Reading
To Top