Connect with us

News

Video: நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலாவாக உருமாறிய விதம்.!

நடிகர் நானி தற்போது ‘தசரா’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 

நேற்று இப்படத்தின் டிரெய்லர் லக்னோவில் உள்ள பிரதிபா திரையரங்கில் பிரமாண்டமாக வெளயிடப்பட்டது.  ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது, படம் ஒரு கிராமிய த்ரில்லராக உருவகியிருப்பது தெளிவாக தெரிகிறது. நானியின் அட்டகாசமான நடிப்பும் நடிகை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரமும் கச்சிதமாக அமைந்திருக்கிறது.

Dasara Trailer [Image Source : Twitter]

இதற்கிடையில், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். அதன்படி, படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ், எப்படி வெண்ணிலாவாக மாறினார் என்பது குறித்த மேக்கப் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷுக்கு இந்த கதாபாத்திரம் சும்மா பக்காவாக போர்ந்திருக்கிறது  என்றே சோலா வேண்டும். இதோ அந்த வீடியோ..

இதையும் படிங்களேன் – கோலார் தங்க வயலில் பா.ரஞ்சித்.! தீவிரமாக தயாராகும் தங்கலான்..!

மேலும், இந்த அதிரடி கிராமிய படத்தில் ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Continue Reading
To Top