Connect with us
shakeela about Adjustment

News

அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருந்தால் எப்படி இருக்கும்… நடிகை ஷகீலாவின் விபரீத ஆசை…

நடிகை சகிலா சமீபகாலமாக ஊடகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் அது மட்டுமின்றி சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வருகிறார். ஆபாச படங்களில்  நடித்ததன் மூலம் பிரபலமான இவரை  குக் வித் கோமாளி நிகழ்ச்சி வேறு பரிமாணத்திற்கு மாற்றி விட்டது என்று கூறலாம் . ஆபாச பட நடிகை என்று இவரை பலரும் அழைத்த நிலையில், குக் வித் கோமாளி ஷகிமா..என அழைக்க வைத்தது.

shakeela cwc

shakeela cwc [Image Source : File Image ]

இந்த நிலையில், நடிகை ஷகிலா தனது மனதிற்கு தோன்றும் கருத்துக்கள் அல்லது தன்னிடம் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்டாலும் அதற்கு ஒளிவு, மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே பதில் அளித்து விடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஷகீலாவிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு எந்த வித தயக்கமும் இல்லாமல் ஷகிலாவும் பதில் அளித்துள்ளார்.

shakeela

shakeela [Image Source : mobcup]

இது குறித்து பேசிய ஷகீலா ” என்னுடைய இயக்குனர்கள் என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னை பார்த்து பயப்பட தொடங்கி விட்டார்கள். ஏனென்றால் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் நான் நடிக்க தேதி கொடுக்க மாட்டேன் என்று. இது எல்லாம் ஒரு வயதில். அதன் பிறகு ஜெயம் படத்தில் நடிக்கும்போது எல்லாம் மாறிவிட்டது அப்போது எனக்கு  35 வயது இருக்கும். எனவே பலரும் என்னை அக்கா அக்கா என்று அழைக்க தொடங்கினார்கள்.

shakeela

shakeela [Image Source : cinestaan]

அதன் பிறகு இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட பிறகு பலரும் என்னை அம்மா அம்மா என்று மரியாதையுடன் அழைக்கிறார்கள்.  எனக்கு எங்கேயுமே இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பற்றி எந்த பிரச்சினையும் எனக்கு நடக்கவில்லை. ஆனால் என்னிடமும் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது.

shakeela

shakeela [Image Source : File Image ]

என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் அதை நான் எப்படி எடுத்துக் கொண்டு அவனுக்கு பதிலளிப்பேன் என்பதை எனக்கே பார்க்க ஆசையாக இருந்தது. எனக்கு கோபம் அதிகமாக வராது அப்படி கோபம் வந்தால் யாராலயும் தடுக்க முடியாது. எனவே, என்னிடம்  அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டிருந்தால் அவன் இந்த சினிமா துறையில் இருந்திருக்க மாட்டான்” என கூறியுள்ளார்.

 

Continue Reading
To Top