‘அசுரன்’ படத்தில் என்னுடைய காட்சிகள் பிடிக்கவே இல்லை…பரபரப்பை கிளப்பிய ‘துணிவு’ நடிகை.!
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகள் மேல் வசூல் செய்தது.

Asuran Manju Warrier [Image Source: Google]
இந்த படத்தில் நடித்ததன் மூலம் தான் மஞ்சு வாரியார் தமிழுலும் கூட பிரபலமானார் என்றே கூறலாம். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அசுரன் படத்தில் தன்னுடைய பகுதிகள் பிடிக்கவில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்களேன்- முதன் முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் யுவன்..?! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘தலைவர் 171’.?

Asuran Manju Warrier [Image Source: Google]
இது குறித்து பேசிய அவர் ” நான் அசுரன் படம் பார்க்கும் பொது என்னுடைய காட்சிகள் வரும் பகுதிகள் (Portion) எனக்கு பிடிக்கவில்லை. அதனை பார்க்கையில் நான் இன்னும் படத்தில் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோணும். நான் வரும் காட்சிகளை தவிர்த்து மற்ற எல்லா காட்சிகள் நன்றாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Manju Warrier Thunivu [Image Source: Google]
இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் இப்படி சொல்லிட்டிங்க..? அசுரன் படத்தில் நீங்கள் அருமையாக நடித்திருந்தீர்கள் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை மஞ்சு வாரியர் தற்போது அஜித்திற்கு ஜோடியாக துணிவு திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
