News
நடராஜன் யாருனே எனக்கு தெரியாது… நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்.!!
நடிகர் எஸ்.ஜே. சூர்யா தனது மனதிற்கு தோணும் விஷயங்களை எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே பேசி விடுவார் அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்தபோது நடந்த சுவாரசியமான சம்பவ குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதன்படி, எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாதாம்.

SJ Suryah [Image Source : File Image ]
ஒருநாள் சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது மனைவி, குழந்தையுடன் ஹைதராபாத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்தாராம். எஸ்.ஜே. சூர்யாவை பார்த்தவுடன் நடராஜன் “சார் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துகொள்ளலாமா..? என கேட்டாராம். அதற்கு எஸ்.ஜே. சூர்யாவும் ‘வாங்க எடுத்துக்கொள்ளலாம்’ என கூறிவிட்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டாராம்.

t natarajan family [Image Source : File Image ]
பிறகு, நடராஜனிடம் இது உங்கள் குழந்தையா என கேட்டு எஸ்.ஜே. சூர்யா குழந்தையும் கொஞ்சினாராம். பின், எஸ் ஜே சூர்யாவின் உதவியாளர்கள் சார் நாங்களும் ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறோம் என கூற, அதற்கு இப்போதைக்கு எதற்கு என்னுடன் போட்டோ ..? என்று எஸ்.ஜே.சூர்யா கேட்டுள்ளாராம். அதற்கு அவரது உதவியாளர்கள் சார் உங்களிடம் இல்லை நடராஜன் சார் கூட என கூறினார்களாம்.

t natarajan family [Image Source : File Image ]
இதன் பின் சற்று இன்ப அதிர்ச்சியான எஸ்.ஜே சூர்யா தன்னுடைய உதவியாளர்களிடம் யார் இவர்.? என்று கேட்க அதற்கு அவருடைய உதவியாளர்கள் சார் இது கிரிக்கெட் வீரர் நடராஜன் சார் என்று கூறினார்களாம். பிறகு, உடனடியாக எஸ்.ஜே சூர்யா சார் சாரி சார் என நடராஜனிடம் சாரி கேட்டுவிட்டு எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது என்று கூறினாராம்.

sjs about t natarajan [Image Source : File Image ]
பிறகு, கையை குலுக்கி கொண்டு எஸ்.ஜே.சூர்யா நடராஜனிடம் சார் நான் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என கூறிவிட்டு அவருடன் புகைப்படம் எடுத்தாராம். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகவே பேசுகிறீர்கள் சூப்பர் தலைவா என எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டி வருகிறார்கள்.
