Connect with us
shrutika cook with comali

News

எனக்கே என்னை பிடிக்கல…நடிகை ஸ்ருதிகா வேதனை.!!

நடிகையும், தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியுமான ஸ்ருதிகா குக் வித் கோமாளி 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை தட்டி சென்றதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். ஸ்ருதிகா 2,000 காலகட்டத்தில் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

sruthika

sruthika [Image Source : File Image ]

அந்த சமயத்தில் ஸ்ருதிகா மிகவும் சின்ன பொன்னாக இருந்தார். ஆனால், தோற்றம் ஹீரோயின்களுக்கு ஏற்றது போல் இருந்த காரணத்தால் அவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிகா வேதனையுடன் பேசியுள்ளார்.

Shrutika

Shrutika [Image Source : Instagram/@shrutika_arjun]

இது குறித்து பேசிய ஸ்ருதிகா ” நான் ஸ்ரீ  படத்தில் நடித்துமுடித்துவிட்டு படத்தை பார்த்தவுடன் எனக்கே என்னை பிடிக்கவில்லை. ஏனென்றால், அந்த காட்சியில் இந்த மாதிரி நடித்திருக்கலாம்…அந்த கட்சியில் அந்த மாதிரி நடித்திருக்கலாம் என்று தோனியது. படப்பிடிப்பு சமயத்தில் ரொம்ப அதிகமாகவே திட்டு வாங்கி இருக்கேன்.

Shrutika

Shrutika [Image Source : Instagram/@shrutika_arjun]

அந்த சமயம் நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்தேன். என்னை திட்டும் போது இயக்குனர் எனக்கு சப்போர்ட் செய்து பள்ளிக்கூடம் படிக்கிற பொண்ணு திட்டாதீங்க என சொல்வார். அந்த அளவிற்கு எனக்கு பயங்கரமா திட்டுவிழும்.  ஸ்ருதிகா ஒழுங்கா நடி என கத்துவார்கள். எனக்கு அந்த சமயம் மிகவும் பயமாக இருந்தது.

Shrutika

Shrutika [Image Source : Instagram/@shrutika_arjun]

இதையும் படியுங்களேன்- த்ரிஷாவை ஏமாற்ற போகும் லியோ படக்குழு..செம கடுப்பில் ரசிகர்கள்.!!

ஒரு கட்டத்தில் யோசித்து பார்த்தேன். சினிமாவில் இருந்து விலகி படிப்பில் ஆர்வம் கட்டவேண்டும் என்று, பிறகு அப்படி தான் சினிமாவில் இருந்து விலகினேன். ஆனால், இப்போது ரொம்ப வருத்தப்படுகிறேன். ஏனென்றால், அந்த காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது நான் கடின உழைப்பு செய்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருப்பேன்” என  ஸ்ருதிகா வருத்தத்துடன் பேசியுள்ளார்.

Continue Reading
To Top