Celebrities
பலமுறை திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன்…நடிகை தமன்னா ஆவேசம்.!
நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல, தெலுங்கில் போலே சூடியன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.

Tamannaah [Image Source: Google]
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா காதல் வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” நான் விஜய் வர்மாவுடன் ஒரு திரைப்படத்தில் தான் நடித்துள்ளேன். அதற்குள் எதற்காக நாங்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

Tamannaah [Image Source: Google ]
நடிகைகள் தான் இது போன்ற காதல் வதந்திகளிலும். திருமண வதந்திகளுக்குள் சிக்குகின்றார்கள். எனக்கும் இதுபோன்று பல வதந்திகள் வந்தது. இதனால் என்னவோ எனக்கு பலமுறை திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tamannaah [Image Source: Google ]
இப்படியேல்ல வதந்தி தகவல் பரவி வருவது சற்று வேதனையாக இருக்கிறது. உண்மையில் நான் திருமணம் செய்துகொண்டால் எல்லோரும் உற்சாகமாவார்களா, இல்லை இதுவும் வதந்தி என நினைப்பார்களா என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
