Connect with us
Silk Smitha

News

தீவிரமாக காதலித்தேன்..சில்க் ஸ்மிதாவுக்கு தூண்டில் போட்ட பிரபல இயக்குனர்…அவரே உளறிக்கொட்டிய உண்மை தகவல்..

பிரபல கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்கள் மனதில் இன்னும் நீங்காத இடத்திலே உள்ளார் என்றே கூட கூறலாம்.  இப்போது இருக்கும் 2k கிட்ஸ் பலருக்கும் சில்க் ஸ்மிதாவை பிடிக்கும். அந்த அளவிற்கு அருமையான நடிப்பையும், அட்டகாசமான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Silk Smitha

Silk Smitha [Image Source : Twitter / @Thala_RL]

இந்நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி தெரியாத பல விஷயங்களை சினிமாபிரபலங்கள்  பலரும் ஊடகத்திற்கு கொடுக்கும் பேட்டியில் வெளிப்படையாக பேசுவது உண்டு. அந்த வகையில், பிரபல இயக்குனரான வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதாவை காதலித்ததாகவும், அவருக்கு தூண்டில் போட்டதாகவும் வெளிப்படையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

SilkSmitha cute

SilkSmitha cute [Image Source : Twitter / @nithyasuja]

இது தொடர்பாக பேசிய வேலு பிரபாகரன்  ” சில்க் ஸ்மிதாவை நான் காதலித்தேன். முதலில் அவருக்கு தூண்டில் போட்டது நான் தான். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா ஆண்களை போல நானும், அவரை தீவிரமாக காதலித்தேன். ஆனால் என்னுடைய காதல் பலிக்கவில்லை. சில்க் ஸ்மிதாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அதை என்னிடமே கூறியிருக்கிறார்.

Velu Prabhakaran

Velu Prabhakaran [Image Source : moviebuff]

நானும் சில்க் ஸ்மிதாகிட்ட கேட்டிருக்கேன் என்னை எதற்காக உங்களுக்கு பிடிக்கும் என்று. அதற்கு அவர் நீ ரொம்ப எளிமையான நபர். ரொம்ப பொறுமையாக இருப்பாய் என்னை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பாய் அதனால் உன்னை எனக்கு பிடிக்கும் என்று சொல்வார். சில்க் ஸ்மிதாவிடம் இருந்த மிகப்பெரிய குணம் என்னவென்றால், அவர் ஒரு மகத்தான பெண்மணி.

Silk Smitha

Silk Smitha [Image Source : Twitter / @sunil_thilak]

ஜெயமாலினி மாதிரி எல்லாம் சில்க் ஸ்மிதா கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் இல்லை. சில்க் ஸ்மிதா எந்த மாதிரி உடைகள் கொடுத்தாலும் அதனை போட்டுக்கொள்வார். அதற்காக பயப்படவே மாட்டார். அந்த விஷயத்தில் மிகவும் தைரியமான பெண்” என கூறியுள்ளார். மேலும் இயக்குனர் வேலு பிரபாகரன்  ஒரு இயக்குனரின் காதல் டைரி,காதல் கதை,கடவுள்,புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top