News
நிறைய தப்பு பண்ணி இருக்கேன்…நீ அந்த தப்ப பண்ணாதமா..மகளுக்கு அட்வைஸ் கொடுத்த ரோபோ சங்கர்..
நடிகை ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தனது மகளுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். குடும்பத்துடன் பேட்டியில் கலந்து கொண்ட ரோபோ சங்கரிடம் அவருடைய மகள் இந்திரஜா சங்கர் நான் செய்த தவறு என்னுடைய மகள் நீ செய்யக்கூடாது என்ற ஒரு விஷயம் என்றால் நீங்கள் எதனை சொல்வீர்கள்..? என தனது தந்தை ரோபோ சங்கரிடம் கேள்வி கேட்டார்.

robo shankar [Image Source : File Image ]
அந்த கேள்விக்கு பதில் அளித்த ” கல்யாணம் எல்லாம் நான் கிடையாது நான் அதை சொல்லமாட்டேன் பயப்படாதா..நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன் ஆனால் பிறகு அதை எல்லாம் திருத்தி கொண்டுவிட்டேன். அதேபோல நீ என்ன தப்பு எல்லாம் செய்கிறாய் என்று உனக்கே தெரியும். அதனை நீயே திருந்திக்கொள்ளவேண்டும்.

Indraja Shankar and robo shankar [Image Source : File Image ]
குறிப்பாக உனக்கு முன்கோபம் ரொம்ப வரும். எந்த இடத்திலும் கோபப்படாமல் இருக்கவேண்டும். அதனை நீ குறைத்து கொள். அதைபோல் ஒரு இடத்திற்கு செல்கிறாய் என்றால், அதனை நேரம் தவறாமல் போகவேண்டும். அதில் நீ இன்னும் கவனமாக இருக்கவேண்டும். இதை தான் உன்னுடைய அம்மாவிற்குள் சொல்லியிருக்கிறேன். உனக்கும் அதைத்தான் சொல்கிறேன்.
இதையும் படியுங்களேன்- ஓவரா பண்ணாதீங்க ஜோதிகா…அப்புறம் பின் விளைவு ரொம்ப பயங்கரமா இருக்கும்…

robo shankar [Image Source : File Image ]
ஒரு பொண்ணு காலையில் எவ்வளவு நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு எழுந்து வீட்டை பெருக்க வேண்டும். வீட்டில் பாத்திரத்தை கழுவ வேண்டும் எல்லா வேலைகளையும் வீட்டில் நீ பார்க்க வேண்டும்” என அன்புடன் தனது மகளுக்கு ரோபோ சங்கர் அட்வைஸ் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ரோபோ கண்ணில் மரண பயம் தெரிகிறது என கலாய்த்து வருகிறார்கள்.
