Connect with us
surekha vani

Videos

எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல…பதறிப்போய் வீடியோ வெளியிட்ட நடிகை சுரேகா வாணி…

தமிழில் விஸ்வாசம், ஜில்லா உத்தம புத்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. இவர் ரஜினி நடிப்பில் தமிழில் வெளியான காலா திரைப்படத்தை வாங்கி தெலுங்கில் வெளியிட்டவர். இந்நிலையில், நடிகை சுரேகா வாணி மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி சௌத்ரியுடன் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

surekha vani

surekha vani [Image Source : Twitter /@Way2Politics]

பார்ட்டியில் இருவரும் இருக்கும் படியும், ஒரு புகைப்படத்தில் சுரேகா வாணிக்கு அவர் முத்தாக கொடுப்பது போலவும் புகைபடங்கள் வெளியானது. மேலும் ஏற்கனவே, கே.பி சௌத்ரி கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த விசாரணையில் போதைப் பொருட்களை அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து, கே.பி சௌத்ரி  போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் சுரேகா வாணி  இருந்த புகைப்படங்கள் வைரலானதால் அவருக்கும் இந்த போதைப்பொருள் வழக்கில் தொடர்ப்பு இருக்கும் எனவும், இதன் காரணமாக தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் எனவும் தகவல்கள் பரவியது.

KP chowdhary Surekha Vani

KP chowdhary Surekha Vani [Image Source : File Image ]

இந்த நிலையில், இத்தகைய தகவல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், விளக்கத்தை பேசி வீடியோவாக நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியதாவது ” அனைவருக்கும் வணக்கம், எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் எனது தொழில், எதிர்காலம், எங்கள் குழந்தைகளின் வாழ்க்கை, எங்கள் குடும்பம், எங்கள் உடல்நலம் மற்றும் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.

Continue Reading
To Top