News
வடசென்னை 2 கதை எனக்கு தெரியும்…மேடையில் உண்மையை உடைத்த விஜய் சேதுபதி.!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடைபெற்றது.

ViduthalaiAudioLaunch [Image Source: Twitter]
விழாவில், சூரி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய விஜய் சேதுபதி வடசென்னை படம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய விஜய் சேதுபதி ” வடசென்னை 2 படத்தின் கதையை நான் கேட்டுவிட்டேன். மிகவும் அருமையாக இருக்கிறது.
இதையும் படியுங்களேன்- ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்.! இயக்குனர் யார் தெரியுமா..?

VijaySethupathi [Image Source: Twitter]
வடசென்னை பகுதி-1 வாய்ப்பை இழந்ததற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன், நான் இன்னும் படம் பார்க்கவில்லை, நான் படத்தைப் பார்த்தால் நான் இன்னும் மோசமாக உணர்வேன் ” என்று கூறியுள்ளார். மேலும். வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran [Image Source: Twitter]
அவரை தொடர்ந்து பேசிய வெற்றிமாறன் ” விடுதலை 2 படங்களை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை தொடங்குவோம் வாடிவாசலுக்கு பிறகு வடசென்னை 2 தான்” என்று கூறி அசத்தலான அப்டேட்டையும் கொடுத்திருந்தார். மேலும் விரைவில் விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
