News
அது ரெம்ப பிடிச்சிருந்தது… 8 ஆயிரம் கொடுத்து வாங்கிட்டேன்.. ‘பாத்ரூம்’ சீக்ரெட் கூறிய தமன்னா.!
நடிகை சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.அவர் ட்ரெண்டிங்கில் இருப்பதற்காக பல காரணங்கள் இருக்கிறது. ஒரு காரணம் என்னவென்றால், அவர் சமீபகாலமாக நடித்துள்ள ஹிந்தி படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் அவர் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ஆபாசமான காட்சிகளில் நடித்திருந்தது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

Tamannaah [Image Source : Instagram/@tamannaahspeaks]
மற்றோரு காரணம் தமன்னா நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தெரிவித்தது. இந்த இரண்டு காரணங்களால் தான் தமன்னா சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அவரை பற்றிய செய்திகள் தான் இப்போது பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா பாத்ரூம் குறித்த ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Tamannaah [Image Source : Instagram/@tamannaahspeaks]
அது என்னவென்றால், நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளாராம். அந்த ஹோட்டலில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த குளியலறையில் வைத்திருந்த உடைகள் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அவர் ஹோட்டலில் தங்கும்போது அவருடைய நண்பரும் தங்குவதராக வந்திருந்தாராம். அப்போது குளிக்கலாம் என குளியலறைக்கு சென்றபோது அங்கு ஹோட்டல் நிர்வாகம் வைத்திருந்த உடைகள் மிகவும் அழகாக இருந்ததாம்.

Tamannaah [Image Source : Instagram/@tamannaahspeaks]
அந்த துணி தனக்கும், தன்னுடைய தோழிக்கும் மிகவும் பிடித்துப்போக உடனடியாக ஹோட்டல் உரிமையாளரிடம் பேசி அந்த துணி எனக்கு புதிதாகவேண்டும் என கேட்டுள்ளாராம். உடனடியாக அந்த ஹோட்டலில் உள்ள முக்கிய நபர்கள் அதே மாதிரி ஒரு உடையை எடுத்துக்கொண்டு தமன்னாவிடம் கொடுத்தார்களாம். இதனால் உற்சாகம் அடைந்த தமன்னா 8,000 கொடுத்துவிட்டு அந்த துணியை வாங்கியுள்ளாராம். இந்த சீக்ரெட் தகவலை தான் தமன்னா தெரிவித்துள்ளார்.
