Interviews
நான் இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகமே பார்க்கல – நடிகர் பார்த்திபன்
பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை என்று நடிகர் பார்த்திபன் பேட்டி.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி பெரிய திரையரங்குகளில் வர உள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற்ற பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். மேலும், டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இப்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் மேடையில் பேசினார்கள்.
அப்போது, பொன்னியின் செல்வன் குறித்து நடிகர் பார்த்திபன், “நான் இன்னும் முதல் பாகமே பார்க்கவில்லை, தஞ்சாவூரில் முதல் நாள் முதல் காட்சி பார்க்கச் சென்று, ரசிகர்களிடையே மாட்டிக்கொண்டேன். முதல் பாகத்தில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியாது, 2வது பாகத்தில் என்ன இருக்கப்போகிறது என்றும் எனக்கு தெரியாது என்று கூறிஉள்ளார்.
கடன் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலிஸுக்கு பாக்க தஞ்சாவூர் சென்றார். அப்போது, ஒரு விளம்பரத்துக்காக தான் தஞ்சாவூர் வருவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். அதன்படி, ரசிங்கர்களும் அவர் வருகை தெரிந்து குவிய தொடங்கினர். தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தந்தார் நடிகர் பார்த்திபன். அப்போது யாராளமான ரசிகர்கள் அவரிடம் செல்பீ எடுத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related
