News
நான் இரவு 3 மணிக்கு அவுங்களுக்கு தான் கால் பண்ணுவேன்.! உண்மையை உளறிக்கொட்டிய உதயநிதி.!!
இயக்குனர் மாரிச்செல்வர்ஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் படம் தரமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து வருகிறது.

maamannan movie [Image Source : File Image ]
இதற்கிடையில், படத்தின் ப்ரோமோசனுக்காக கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்கள். அந்த பேட்டியில் இருவரிடமும் நீங்கள் யாருக்கு இரவு நேரங்களில் 3 மணிக்கு போன் செய்து பேசுவீர்கள்..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு இருவருமே பதில் அளித்துள்ளார்கள்.

udhayanidhi stalin keerthy suresh [Image Source : Instagram/@keerthysureshofficial]
முதலில் பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் ” நான் அதிகமாக 10 மணிக்கு மேல் போன் பேசமாட்டேன். அதற்கு முன்னாடி வரை 9 மணி அந்த நேரத்தில் உதயநிதி சாரிடம் பேசுவேன். நடிகர் நிதினிடம் பேசுவேன். பிறகு கல்யாணி பிரியதர்சனிடம். பிறகு நடிகர் நானியிடமும் அதிகமுறை பேசியிருக்கேன்” என கூறினார்.

udhayanidhi stalin keerthy suresh [Image Source : Instagram/@keerthysureshofficial]
இதையும் படியுங்களேன்- சாக்லேட் பாய் அரவிந்த் சாமியின் மார்க்கெட் போனதற்கு இதுதான் கரணம்.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
அதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ” என்னுடைய பெயரை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார். நான் அவருடைய பெயரை கூறவில்லை என்றால் அது தப்பாகிவிடும் என சிரித்துக்கொண்டே கூறிவிட்டு நான் அதிகமாக சினிமாத்துறையில் உள்ளவர்களிடம் பேசுவது ஆர்யாவிடம் பேசுவேன். இப்போது மாரிசெல்வராஜிடம் பேசுவேன். பிறகு சந்தானம் கிட்ட பேசுவேன்” என கூறியுள்ளார்.
