News
ரஜினிக்கு தான் வில்லனா நடிப்பேன்…அடம் பிடிக்கும் 40 கதை அஸ்வின்…கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்…
குவித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். பிறகு 40 கதை சர்ச்சை மூலம் இன்னுமே பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசிய அஸ்வின் தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்கள் கூறும் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன்.

Ashwin Kumar Lakshmikanthan [Image Source : Instagram/@ashwinkumar_ak
]
இதுவரை அப்படி 40 கதைகள் கேட்டு அந்த 40 கதைகளிலும் நான் தூங்கிவிட்டேன்” என மிகவும் எதார்த்தமாக பேசியிருந்தார். அவர் பேசியதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து நடிச்சது 1 படம் அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்..? என கேட்டனர். இப்படி சர்ச்சை கிளம்பிய நிலையில், அஸ்வின் மிகவும் பதட்டத்துடன் நான் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன்” என மன்னிப்பு கேட்டு இருந்தார்.

Ashwin Kumar Lakshmikanthan [Image Source : Instagram/@ashwinkumar_ak
]
ஆனாலும், அஸ்வின் அப்படி பேசியதிலிருந்து அவரை பிடித்தவர்களுக்கு கூட பிடிக்காமல் போய்விட்டது என்றே கூறலாம். அவர் அப்படி பேசியதிலிருந்து அஸ்வின் எந்த பேட்டிகளிலும் எதாவது பேசினால் பலரும் அவரை கலைத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக அஸ்வின் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.

Ashwin Kumar Lakshmikanthan [Image Source : Instagram/@ashwinkumar_ak]
அந்த பேட்டியில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அஸ்விணும் பதில் அளித்தார். அப்போது தொகுப்பாளர் நீங்கள் வில்லனாக ஒரு ஹீரோவுக்கு நடித்தால் யாருக்கு வில்லனாக நடிப்பீர்கள்.? என்ற கேள்வியை கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின் எனக்கு தலைவர் ரஜினிகாந்திற்கு தான் வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது.

cook with comali ashwin about rajini [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- நிறைய வாய்ப்பு வருது…ஆனா நடிக்க போக முடியல…கதறி கண்ணீர் விடும் பாவா லட்சுமணன்.!!
சிறிய வயதில் இருந்து எனக்கு ரஜினிகாந்தை பிடிக்கும். அவருடைய கண்ணீல் ஒரு பவர் இருக்கும். எனவே, அவருக்கு வில்லனாக நடித்தால் சூப்பரா இருக்கும் அது தான் எனது ஆசை” என தெரிவித்திருந்தார் இந்த தகவலை பார்த்த ரஜினி ரசிகர்கள் நீங்கள் ரஜினிக்கு வில்லனாக நடித்தால் எப்படி ப்ரோ செட் ஆகும்..? என கலாய்த்து வருகிறார்கள்.
