Connect with us

News

இடுப்பழகி சிம்ரனின் 50வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2k காலகட்ட தொடக்கத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், தற்போது துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது சிம்ரனின் 50வது தமிழ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பு வெளியாகியுள்ளது.

Sabdham marks your 50th film in simran

Sabdham marks your 50th film in simran [Image Source: Twitter]

அதாவது, இயக்குனர் அறிவழகன் இயக்கும் ‘சப்தம்’ என்ற புதிய படத்தில் இணைந்துள்ளார். நடிகர் ஆதி பின்னிசெட்டி நடிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசைமைத்து வருகிறார். சப்தம் திரைப்படம் சிம்ரனின் 50வது தமிழ் படம் என்று தயாரிப்பாளர்கள் போஸ்டர் மூலம் அறிவித்தனர்.

இதையும் படிங்களேன் – வாத்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு.!

ஆல்பா ஃப்ரேம்ஸுடன் இணைந்து 7ஜி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் சப்தம் படத்தில் நடிகை லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். படத்திற்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவாளராகவும், விஜே சாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

Continue Reading
To Top