News
அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றால் அடிப்பார்கள்…சீரியல் நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்.!
சினிமா துறையில் இருக்கும் பல நடிகைகள் சமீபகாலமாக அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேட்டிகளில் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், சித்தி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஷில்பா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Chithi shilpa [Image Source: Twitter]
அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசிய நடிகை ஷில்பா ” எனக்கும் சில அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகள் நடந்துள்ளது. நான் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு ஒற்றுக்கொள்ள மாட்டேன். அப்படி ஒற்றுக்கொள்ளவில்லை என்றால், சீரியல்களில் அடிக்கும் காட்சி இருந்தால் நிஜமாகவே அடிப்பார்கள். அட்ஜெஸ்ட்மென்ட்க்கு ஒற்றுக்கொள்ளாத காரணத்தால் இப்படி செய்வார்கள்.

Actress Shilpa [Image Source: Twitter]
அதைப்போல திட்டும் காட்சியில் நடித்து கொண்டிருந்தாள் நிஜமாகவே மிகவும் கேவலமாக தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள்” என கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த சிலர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு ஒற்றுக்கொள்ளாத காரணத்தால் இப்படி நடந்து கொள்வார்களா..? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Varalaxmi Sarathkumar [Image Source: Twitter]
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கூட நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹீரோவும், இயக்குனரும் என்னிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமானு என்று கேட்டு இருக்காங்க என்று கூறி இருந்தார். அவரை தொடர்ந்து ஷில்பா அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
