13.7 C
London
Monday, July 15, 2024

#Breaking:நாடு முழுவதும் ஒரே நாளில் 1.79 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு;4 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 146 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,57,07,727 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,003 ஆக உயர்வு.

  • கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 19,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,57,07,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 146 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,83,936 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 46,569 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,45,00,172 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,90,611 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 7,23,619 ஆக அதிகரித்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,51,94,05,951 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 29,60,975 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதிப்பு:

  • நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,003 ஆக உயர்ந்துள்ளது.அதில் 1,552 பேர் குணமடைந்துள்ளனர்.
  • ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 1,216,டெல்லியில் – 513,கேரளாவில் – 333,தமிழகத்தில் – 185 ஆக பதிவாகியுள்ளது.
- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img