17 C
London
Monday, July 15, 2024

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி?

வயநாடா ? ரேபரேலியா ? ராகுல் காந்தி எந்த தொகுதி எம்.பியாக தொடரவுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் இன்று வெளியிட உள்ளது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

புதுடெல்லி : வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ள ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் இன்று வெளியிட உள்ளது.

முந்தைய மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வடக்கில் ரேபரேலி மற்றும் தெற்கில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளுக்கு எம்.பி. ஆக இருக்க முடியாததால், அவர் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் இருந்து எம்.பி. ஆக இருப்பது, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கருத்துப்படி, அரசியல் ரீதியாக சரியான முடிவாக இருக்கும். ரேபரேலி, நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி என்பதால், அதன் முக்கியத்துவத்திற்காக ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி.யாக தொடர முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால், அந்த தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here