14.4 C
London
Friday, July 12, 2024

அமித் ஷாவுடன் நிகழ்ந்த உரையாடல்: விளக்கம் அளித்த தமிழிசை சௌந்தரராஜன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் மேடையில் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜனை அழைத்து எதோ பேசினார். சற்று கோபத்துடன் அமித் ஷா பேசுவதாக வீடியோவில் தெரிய, சமூக வலைத்தளங்களில் இது வைரலானது. பலர், அமித் ஷா தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்ததாகவும், அவமானப்படுத்தியது போல் இருந்ததாகவும் கருத்துக்களை வெளியிட்டனர்.

இதற்கு விளக்கமாக, தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அமித் ஷா என்னை மேடையில் அழைத்து, தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார். நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு அறிவுறுத்தினார். தேவையற்ற வதந்திகள் பரவுவதால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என்றார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here