‘தலைவர் 169’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லியாக இந்த நடிகையா.?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய திரைப்படமான ‘தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் தீவிரமாக ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றதாம். அனிருத்தின் இசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில்,சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வடிவேலு, யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் ‘தலைவர் 169’ படத்தில் நடிக்கிறார்கள் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
இதையும் படிங்களேன்- எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வலிமை சாதனையை முறியடித்ததது பீஸ்ட்.!
தற்போது இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது இப்போத, கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த ‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன் நடித்ததை நியாபகம் செய்கிறது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பது அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும், நெல்சனின் இயக்கும் இப்படத்தில் அவருக்கும் ரஜினிக்கும் இடையே இருக்கும் கதாபாத்திரத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
