News
அமலா பால் சமீபகாலமாக கோவிலுக்கு செல்ல காரணம் இதுதானா..? வெளியான ரகசிய தகவல்.!
நடிகை அமலா பால் கடந்த சில நாட்களாகவே பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துகொண்டு அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு குளத்தில் புனித நீராடினார்.

Amala Paul bath in holy water [Image Source: Twitter]
அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. இந்நிலையில், திடீரென கோவில் கோவிலாக அமலா பால் எதற்காக செல்கிறார் என்பதற்கான சிறிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அது என்னவென்றால், திருமணம் முறிவு, காதல் தோல்வி, படங்கள் இல்லாதது என தொடர் கவலையில் மூழ்கிய அமலா பால், தனது மனதை திசை திருப்பிக் கொள்ள முழுமையாக ஆன்மிகத்தில் இறங்கியுள்ளாராம்.

Amala Paul Smile [Image Source: Twitter ]
இதன் காரணமாகே அமலா பால் சமீபகாலமாக கோவிலுக்கு சென்று வருகிறாராம். மேலும், சமீபத்தில் கோவையில் தியானம் செய்ய ஆசிரமத்துக்கு சென்ற அவர் சுவாமி தரிசனம் செய்து முடித்த அவர் கோவிலுக்கு செல்வதன் மூலம் அங்கு தனக்கு நிம்மதி கிடைத்ததாக சொல்கிறார்.
இதையும் படியுங்களேன்- அடுத்த “சமந்தா” நீங்கதான்…குக் வித் கோமாளி பவித்ராவின் அட்டகாசமான புகைப்படங்கள்.!
மேலும், நடிகை அமலா பால் இந்தி படம் ஒன்றில் படப்பிடிப்புக்கு இடையே போகும் இடங்களில் எல்லாம் பிரபலமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று வருகிறார். இந்த தகவலை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் அமலா பால் இப்பொது தான் நல்ல வழிக்கு திரும்பியுள்ளார் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
