Connect with us
leo vijay filim

News

பழசா இருந்தாலும் புதுசா இருக்கு…லியோ படத்தில் இணைந்த டாப் பிரபலம்.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே,படத்திலிருந்து வெளியான நா ரெடி தான் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

leo vijay

leo vijay [Image Source : File Image ]

இதற்கிடையில், தற்போது படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக புதிய அப்டேட்  தகவல்களாக வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் கேமியோ ரோலில்  நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லியோ படம் ஆரம்பிக்கும் போதே படத்தில் ராம்சரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவியது.

ramcharan leo

ramcharan leo [Image Source : File Image ]

இதனை தொடர்ந்து தற்பொழுது படம் வெளியாகும் சில மாதங்களில் இருக்கும் நிலையில் தற்பொழுது இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் சூர்யா ஒரு கேமரா ரோல் ஒன்றில் நடத்திருப்பார். அதேபோல, இந்த லியோ படத்திலும் ராம்சரண் கேமியோரிலில்  நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

leo vijay MOVIE

leo vijay MOVIE [Image Source : File Image ]

இதையும் படியுங்களேன்- ஒரு நாளைக்கு 7 லட்சம் கேட்கிறேனா..? பட வாய்ப்புகள் வராததால் கடுப்பான இமான் அண்ணாச்சி.!!

உண்மையில் ராம் சரண் இந்த லியோ படத்தில் நடித்துள்ளார் என்று படம் வெளியான பிறகு தான் தெரிய வேண்டும். மேலும் இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் , மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top