Connect with us
asin cry

News

முடியவே முடியாது…அஜித் படத்தில் இருந்து தெறித்து ஓடிய நடிகை அசின்…காரணம் என்ன தெரியுமா.?

ஒரு மாலை இளவெயில் நேரம் என்ற பாடலை கேட்டதும் நடிகை அசினின் நியாபகம் பலருக்கும் வந்துவிடும் என்ற கூறலாம். ஆரம்ப காலகட்டத்தில் நயன்தாராவுக்கு இணையாக வளர்ந்து கொண்டிருந்த அசின் தனது மார்க்கெட்டின் உச்சியில் இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.  சினிமாவை விட்டு அவர் தற்காலிகமாக விலகி இருந்தாலும் கூட அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் இன்னும் குறையவே இல்லை.

Asin

Asin [Image Source : File Image ]

இந்நிலையில், அசின் இதுவரை எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அவர் மிஸ் செய்த மிகப்பெரிய படம் ஒன்றும் இருக்கிறது. அது வேறு எந்த படமும் இல்லை, விஸ்னு வரதன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் தான்.  இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருப்பார்.  ஆனால், நயன்தாரா நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை அசினை தான் படத்தில்  நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து, அஜித்துடன் அசினை வைத்து  போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டதாம். பல ஸ்டன்ட் காட்சிகளில் அவர் கன கச்சிதமாகவும் பொருந்தினாராம்.

billa Asins Look

billa Asins Look [Image Source : File Image ]

போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது.  மேலும், பில்லா  திரைப்படத்தில் இருந்து அவர் விலகியதற்கான காரணம் என்ன என்பதை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இதனையடுத்து, அதற்கான தகவல் ஒன்றை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

Asin miss billa movie

Asin miss billa movie [Image Source : File Image ]

அதன்படி, பில்லா திரைப்படத்தில் அசினை வைத்து போட்டோஷூட் எல்லாம் நடத்திவிட்டார்களாம்.  பிறகு பிகினி காட்சியில் ஒரு போட்டோஷுட் எடுக்கவேண்டும் பிகினி உடையை அணிந்து வாருங்கள் என படக்குழுவினர் கேட்டுள்ளாராம். அதற்கு அசின் முடியவே முடியாது என படத்திலிருந்து தெறித்து ஓடிவிட்டாராம். இதைப்போலவே, சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் பூமிகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் அசின் தான் நடிக்கவிருந்தாராம்.

asin miss sillunu oru kadhal movie

asin miss sillunu oru kadhal movie [Image Source : File Image ]

இதையும் படியுங்களேன்- கிளாமர் போட்டோ போட்டு தான் 10 படம் கமிட் ஆகி இருக்கேன்…அதிர வைத்த நடிகை வாணிபோஜன்…

ஆனால்,  படத்தில்  பூமிகாவை விட ஜோதிகாவிற்கு பேசும் அளவில் கதாபாத்திரமும் அமைந்ததால் ஜோதிகா கதாபாத்திரம் வேண்டுமானால் நான் செய்கிறேன் என அசின் கூறியுள்ளார். ஆனால், அதற்கு படக்குழு ஒப்புக்கொள்ளவில்லையாம். பிறகு பூமிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று அவர் ஒப்புக்கொண்டு படத்தில் நடித்தாராம் இதனால் ஜில்லுனு ஒரு காதல்  பட வாய்ப்பும் அசின் தவறவிட்டதாகவும் ” செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top