Connect with us
jailer

News

பிளாக் பாஸ்டர் அடைந்த ஜெயிலர்! இரண்டாவது பாகம் எடுக்க தயாரான நெல்சன்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னுமே படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jailer movie

jailer movie [Image Source : File Image ]

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமன்னா, மிர்னா மேனன், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, சுனில், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தாக இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றிலும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நெல்சன் ” ஜெயிலர் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கையில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  என்னிடம் ஜெயிலர் படத்தின் 2 வது பாகத்துக்கான யோசனை இருக்கிறது.

அது போலவே, நான் இயக்கிய பீஸ்ட், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்க திட்டம் உள்ளது எனவும்” நெல்சன் தெரிவித்துள்ளார்.  மேலும், நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போவே கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top