Connect with us

News

ரூ.100 கோடி பட்ஜெட்டில் ஜெயம் ரவி.! 18 மொழிகளில் வெளியாகும் பிரம்மாண்ட திட்டம்…

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் 2, இறைவன் மற்றும் சைரன் ஆகிய மூன்று படங்கள் கையிருப்பில் உள்ளது. இந்நிலையில், அவரது அடுத்தபடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் நேற்று காலை வேல்ஸ் பிஓ பட்டியல் விழாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் வரவிருக்கும் திரைப்பட ஸ்லேட்டை வெளியிட்டார்.  அதில், ஜெயம் ரவியின் 32வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளார்.

சுமார், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம், இது ஜெயம் ரவி கேரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படுவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்துக்கு இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இது போக, ‘ஜேஆர்32’ படத்தை 18 மொழிகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

இதையும் படிங்களேன் – ஏப்ரல் 14 ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு.! ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.?

ஆனால், இயக்குனர் மற்றும் நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், ஜெயம் ரவியின் பிரம்மாண்டமான படம் பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Continue Reading
To Top