News
இன்னும் 2 வாரம் தான்…”மாவீரன்” திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் இதோ.!
நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan Maaveeran [Image Source: Google]
இந்த திரைபடத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் இருந்து சமீபத்தில் கூட ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Sivakarthikeyan’s Maaveeran FIRST SINGLE [Image Source: Twitter]
இந்த நிலையில், மாவீரன் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அது என்னவென்றால், மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பாண்டிச்சேரியில் தொடங்கி அடுத்த 2 வாரம் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுறது.
இதையும் படியுங்களேன்- 50,000 வேணுமாம்…பெரும்பாலான பெண்கள் இப்படித்தான்…சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை.!

Maaveeran[Image Source: Twitter]
அந்த படப்பிடிப்புடன் மாவீரன் படத்தின் முழு படப்பிடிப்பும் ஒட்டுமொத்தமாக முடியவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும், படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 21-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
