Connect with us

News

ரோலக்ஸை மிஞ்ச போகும் கதாபாத்திரம்…சிம்பு படத்தில் மாஸ் காட்டப்போகும் கமல்ஹாசன்.!

இப்போது தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் ஏதேனும் ஹீரோக்கள் கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றால் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல பெரிய அளவு கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிக்கிறார்கள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு விக்ரம் படத்தில் சூர்யா தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்றே கூறலாம்.

ROLEX

ROLEX [Image Source: Twitter]

இந்த நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல, நடிகர் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் அதைப்போல சக்தி வாய்ந்த கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்பு நடிக்கவுள்ள 48-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சாரிப்பில் தயாரிக்கிறார்.

இதையும் படியுங்களேன்- பலமுறை திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன்…நடிகை தமன்னா ஆவேசம்.!

str 48

str 48 [Image Source: Twitter]

இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கி படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவ்வபோது படத்தை பற்றி தகவல்கள் பரவுவது வழக்கம்.

Kamal Haasan

Kamal Haasan [Image Source: Google]

அந்த வகையில், தற்போது STR 48 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கியமான கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக அவர் நடிக்கவுள்ள அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பேசப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top