Connect with us

News

படத்தில் கத்தி…நிஜத்தில் பக்தி… மறைந்த தாயின் ஆசைக்காக கோவில் கட்டிய பிரபல வில்லன் நடிகர்.!

நடிகர் டேனியல் பாலாஜி தொடர்ந்து வில்லனாக மட்டுமின்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  ஆவடியில் ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்  கோவில் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார்.

daniel balaji temple

daniel balaji temple [Image Source : Twitter]

இந்த ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்  கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கும்பாபிஷேகம்  நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு மக்கள் பலரும் ரசிகர்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தார்கள். அதற்கான விடியோவையும் டேனியல் பாலாஜி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Daniel Balaji Tc (@danielbalaji_tc)

இந்த நிலையில், எதற்காக கோவில் கோவில் கட்டினீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் டேனியல் பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த கோவிலை கட்டியது என்னுடைய அம்மாவின் ஆசைக்காக தான். அவருடைய ஆசைக்காக மட்டும் தான் முறையான ஆய்வுகள் செய்து இந்த கோயில் கட்டப்பட்டதாகவும், கட்டுவதற்கு முன் கோயில்கள் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன்.

இதையும் படியுங்களேன்- என்னது…கீர்த்தி சுரேஷ் அவரை காதலிக்கிறாரா..? மனம் திறந்த பெற்றோர்.!

 

View this post on Instagram

 

A post shared by Daniel Balaji Tc (@danielbalaji_tc)

கோயில் கட்டும் வேலைப்பாடுகளின் போது நான் ஈடுபட காரணம் எனக்கு இருக்கும் விருப்பம் மட்டும் தான். என்னுடைய இறைத்தாய்க்கு நான் கட்டிக்கொடுத்த வீடுதான் இந்த கோயில்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் படத்துல தான் கத்தி, நிஜத்துல ரொம்ப பக்தி ஆவடியில் அம்மன் கோவில் கட்டிட்டு இருக்கார் ” என டேனியல் பாலாஜியை புகழ்ந்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top