News
பிரபல நடிகையின் சினிமா வாழ்க்கையை சீரழித்த கவுண்டமணி…வெளியான பகீர் தகவல்….
காமெடி நடிகர் கவுண்டமணியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. நடன கலைஞராக இருந்த இவர் கவுண்டமணி உடன் 25 படங்களுக்கு மேல் அவருக்கு ஜோடியாக நடித்து ஒரு காலகாட்டத்தில் கலக்கினார் என்றே கூறலாம். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுண்டமணி தனக்கு வந்த படங்களின் வாய்ப்புகளை தடுத்ததாகவும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை ஷர்மிலி ” நான் காமெடியான படங்களில் முதலில் நடித்தே இருக்க கூடாது.

Sharmili and Goundamani [Image Source : File Image ]
காமெடியான படங்களில் நடித்து என்னுடைய வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேன். இயக்குனர் வி சேகர் இயக்கத்தில் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் கவுண்டமணி சார் என்னிடம் என் கூட ஒரு படம் பண்றியாமா..? என்று கேட்டார். அப்போது எனக்கு காமெடி படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்ற காரணத்தால் நான் காமெடி படங்களில் நடிக்க மாட்டேன் நான் நடிக்கவில்லை என்று நான் முதலில் மறுத்து விட்டேன். நான் எங்க வீட்டு வேலை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலில் “செந்தில்நாதன் இயக்கத்தில் சரத்குமார் ஹீரோ ஒரு படம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கு நடிக்கிறீர்களா..? என்று கேட்டார்கள்.

Sharmili [Image Source : File Image ]
நானும் முதலில் எதையும் பற்றியோசிக்காமல் ஒப்புக்கொண்டேன், ஏனென்றால் அந்த கதாபாத்திரம் கிளாமரான கதா பாத்திரமாக இருக்கும் அல்லது முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டேன். அங்கு சென்று பார்த்த பிறகு தான் தெரிகிறது கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று. எனக்கு அந்த சமயம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் சரி ஒரு படம் தானே என்று அவருடன் நடித்து விட்டேன்.

goundamani and Sharmili [Image Source : File Image ]
அந்த படத்தை நடித்துக் கொண்டிருந்த சமயத்திலே கவுண்டமணி என்னிடம் அடுத்ததாக 4 படங்கள் இருக்கிறது அந்த படங்களில் நீங்களே என்னுடன் நடிக்கிறீர்களா என்று கேட்டார். ஒரு நாள் சிரஞ்சீவி படத்தில் ஒரு நடனம் ஆடுவதற்காக எனக்கு அழைப்பு வந்தது நான் அப்போது கவுண்டமணி உடன் ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். 3 நாள் ஷூட்டிங் முடிந்து ஒரு நாள் மட்டும் பாக்கி இருந்தது. அப்போது நான் அந்த பாடலில் நடனமாடி விட்டு வருகிறேன் என்று கவுண்டமணியிடம் கூறினேன். அதற்கு கவுண்டமணி இல்லை நான் தேதி கொடுத்து விட்டேன் நீங்கள் நடித்துக் கொடுத்துவிட்டு போங்க என்று கூறினார்.

goundamani Sharmili [Image Source : File Image ]
சார் சிரஞ்சீவி படத்தில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது நான் போய் நடித்த வருகிறேன் என்று கூறினேன் ஆனால் அதற்கு கவுண்டமணி மூன்று நாட்கள் நடிச்சிருக்க அதற்கான சம்பளத்தையும் வாங்கியிருக்கிறாய். அந்த சம்பளத்தை கொடுத்து விட்டு திரும்பி போங்க தயாரிப்பு நிறுவனத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். அது மட்டும் இல்லை நீ இந்த படத்தில் இருந்து இப்போது விலகி சென்றால் இதற்கு பிறகு 6 படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளாய் அல்லவா அந்த படங்களில் இருந்தும் உன்னை நீக்குவோம் எனவும் கூறினார். பிறகு நான் சிரஞ்சீவி படத்தில் ஆட வேண்டிய அந்த பாடலை சில்க் ஸ்மிதா ஆடினார்.

goundamani and Sharmili [Image Source : @IndiaGlitz Tamil ]
அந்த பாடலில் ஆடியதன் மூலம் தான் சில்க் ஸ்மிதாவும் மிகவும் பிரபலமானார். அந்த வாய்ப்பு எனக்கு பறிபோனது. இப்படி எனக்கு வந்த பல படங்களின் வாய்ப்பு பறிபோனது அவரால்தான். என்னுடைய சினிமா வாழ்க்கையை சீரழித்தது அவர்தான் என கவுண்டமணி குறித்து இப்படியான பகீர் தகவலை ஷர்மிலி கூறியுள்ளது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
