Collection
அழகு தேவதை… கேஷுவல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கே.ஜி.எஃப் நாயகி.!
கே.ஜி.எஃப் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்களின் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்வது மட்டுமின்றி, கண்ணை கவரும் புகைப்படங்களாலும் தன் சமூக வலைத்தளத்தை ஆக்டிவாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில், அவர் தனது போட்டோஷூட்டில் இருந்து சில புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை நிற உடை அணிந்து ஜெமினி பட ஸ்டிலுடன் முத்தம் கொடுப்பது போல கலக்கலான போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் அற்புதம்…அழகு தேவதை… என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடைசியாக நடிகை ஸ்ரீநிதி தமிழில் ஆக்ஷன் திரில்லரராக உருவாகி வெளிவந்த ‘கோப்ரா’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சியான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கவலையான விமர்சனங்கள் கிடைத்தது.
தற்போது, டாக்டர் சைலேஷ் கோலனு எழுதி இயக்கி வரும் சைன்தவ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் டகுபதி வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
View this post on Instagram
