Connect with us

News

குட்டி ஸ்டோரி ரெடி…. ரசிகர்களே ரெடியா.! 2 ஆண்டுகள் கழித்து தளபதியின் மாஸ் என்ட்ரி…

குட்டி ஸ்டோரி ரெடி…. ரசிகர்களே ரெடியா.! 2 ஆண்டுகள் கழித்து தளபதியின் மாஸ் என்ட்ரி…

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் 2023 ஜனவரி 12 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவர இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளது. அதே நாளில், அஜித் குமாரின் ‘துணிவு’ படமும் வெளியாகவிருப்பதால் வராசு பட ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Master movie

Thalapathy Vijay’s stage scene from Master movie. [Image Source: Google]

இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஒரு வெடியோவையும் எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறது.

மேலும், 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு நான்காவது பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் அந்த மேடையில், நேரலையில் பாடி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.

இதையும் படிங்களேன் – பிறந்தநாள் பரிசாக ஆண்ட்ரியாவின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

Varisu Audio Launch Dec

Varisu Audio Launch Dec [Image Source: Google]

விஜய் படங்கள் வெளியாவதற்கு அந்த படத்திற்கான ப்ரோமொஷன்காக இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்துவிடும். அதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றையும் கூறுவார். விஜய்யை பார்பதற்காகவும், என் நெஞ்சில் குடியிருக்கும் என விஜய் பேசுவதை கேட்பதற்காகவும் இசை வெளியீட்டு விழாவிற்கு பல ரசிகர்கள் வருகை தருவார்கள்.

Varisu

Varisu [Image Source: Twitter]

கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆனால்,  பீஸ்ட் படத்திற்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்றாலும், தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Beast Movie Troll

Beast Movie Troll [Image Source: Google]

இதனால், இரண்டு ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் வாரிசு இசை வெளியிட்டு  விழாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதால், பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி உள்ளது. இந்த வாரிசு இசை வெளியிட்டு  விழாவில் என்ன பேச போகிறார் என்று இந்த வாரம் சனிக்கிழமை வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
To Top