Connect with us

Movies

லத்தி ட்விட்டர் விமர்சனம்: விஷாலின் மாஸ் காம்பேக்….. மிரட்டலா? உருட்டலா?

லத்தி ட்விட்டர் விமர்சனம்: விஷாலின் மாஸ் காம்பேக்….. மிரட்டலா? உருட்டலா?

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் ‘லத்தி’ திரைப்படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீஸ் தேதி இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக, படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Laththi Trailer

Laththi Trailer [Image Source: Google]

இந்த படத்தில், நடிகர் விஷால் போலீஸ் கத்பாத்திரத்தில் நடித்துள்ளார், அது மட்டும் இல்லாமல் நடிகை  சுனைனா 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஷாலுடன் மீண்டும் ஜோடியாக நடித்திருக்கிறார் நடித்தார். லத்தி படத்திற்காக விஷால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்துள்ளார், ஆனால் படத்தின் ஹிந்தி மொழியில் இன்று வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்களேன் – தியேட்டரில் ரசிகர்களை பதம் பார்த்த 2022 பிளாப் லிஸ்ட் படங்கள்…!

Laththi

Laththi [Image Source: Google]

படத்திற்கான அதிகாலை காட்சிகளுடன் திரையிடப்பட்டு பெரும்பாலான ரசிகர்கள் படத்தை பார்த்து மகிழ்ந்தனர். மேலும், இப்படத்தில் நடித்த நடிகர் விஷால் தனது நடிப்புக்காக விமர்சகர்களிடமிருந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறார். முக்கியமாக, படத்தில் விஷாலின் ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தது.

Laththi

Laththi [Image Source: Google]

லத்தி

வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் ‘லத்தி’ படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஷால் காவல் துறையில் லத்தி ஸ்பெஷலிஸ்ட் முருகானந்தம் என்ற கான்ஸ்டபிளாக நடிக்கிறார். ரமணா மற்றும் நந்தாவின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எம் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

லத்தி ட்விட்டர் விமர்சனம்

அறிமுக இயக்குனர் வினோத் குமாரின் கதையில் கோட்டை விட்டார் போல் தெரிகிறது, ஏனெனில், இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சில பிளாக்பஸ்டர் படங்களில் இடம்பெற்ற காட்சிகளின்  ரீமேக் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அட்டகாசமாக வந்திருந்தாலும் படத்தில் பாடல்கள் காமியாகத்தான் அமைந்த்திருக்கிறது.

காயமடைந்த விஷால்

இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஷால் ஒரு முறை அல்ல, மூன்று முறை காயம் அடைந்தார். இவருக்கு ஏன் மூன்று முறை படப்பிடிப்பின் போது ஏன் காயம் ஏற்பட்டது என்று படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வைத்தே தெரிகிறது. அந்த அளவிற்கு படத்தில் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் பக்காவாக அமைந்திருக்கிறது.

Laththi Trailer

Laththi Trailer [Image Source: Google]

Continue Reading
To Top