News
கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படங்கள்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…
தனுஷின் கேரியரில் மிகப்பெரிய படமாக உருவாகி ‘கேப்டன் மில்லர்’ உருவாகி வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஷ்வரன் எழுதி இயக்கிகும் இந்த திரைப்படத்தில், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் தான் தனுஷுடன் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் சிவ ராஜ்குமார் இணைந்தார். இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் பற்றிய சமீபத்திய விஷயம் என்னவென்றால், நடிகர் சந்தீப் கிஷன் படக்குழுவுடன் இணைத்துள்ளார். மேலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது, குற்றாலம் காடுகளில் நடந்து வரும் ஷெட்யூலில் சண்டை காட்சிகளை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, இப்பொது ஷூட்டிங் நடக்கும் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த புகைப்படத்தில், ஆக்ஷன் காட்சிகளுக்கு அணி வகுத்து நிற்கும் சிப்பாய்களின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்களேன் – Video: நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலாவாக உருமாறிய விதம்.!
இப்படத்தின் மோஷன் போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது, தனுஷ் ஒரு ‘கௌபாய்’ போல் தோற்றமளித்தார். இந்நிலையில், வெளிநாட்டு நபர்கள் கண்டிப்பாக தேவப்படும் என்பதால், அதற்கான அதற்கான ஆட்கள் தற்போது வருகை தந்துள்ளதாக தெரிகிறது. இதுபோக படம் முழுக்க காடுகளில் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய வெளியிடாக இருக்கும்.
