News
த்ரிஷாவை ஏமாற்ற போகும் லியோ படக்குழு..செம கடுப்பில் ரசிகர்கள்.!!
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் எங்கேயோ சென்றுள்ள நிலையில், அவர் அடுத்ததாக பல பெரிய படங்களில் நடிக்க கமிட் ஆகியும், சில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

vijay and trisha [Image Source : Instagram/@trishakrishnan]
லியோ திரைப்படத்தை விக்ரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள தகவலை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

trisha [Image Source : Instagram/@trishakrishnan]
இருந்தாலும் லியோ திரைப்படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் த்ரிஷா நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனையடுத்து, தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று பரவி வருகிறது.

madonna sebastian [Image Source : File Image ]
அந்த அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இந்த லியோ திரைப்படத்தில் மடோனா நடிக்க உள்ளதாக முன்னதாக ஒரு தகவல் பரவியது. இந்தநிலையில் மடோனாவிடம் கிட்டத்தட்ட 25 நாட்கள் கால்ஷீட் கேட்டு அவரை திரைப்படத்தில் லியோ பட குழு நடிக்க வைத்துள்ளதாம்.

trisha [Image Source : Instagram/@trishakrishnan]
எனவே, இதனால் நெட்டிசன்கள் பலரும் லியோ திரைப்படத்தில் த்ரிஷா நடிகையா..? அல்லது மடோனா நடிகையா..? என கேள்வி எழுப்ப வருகின்றனர். இப்படியான ஒரு தகவல் பரவி வரும் நிலையில், த்ரிஷா ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் யார் தான் படத்தில் ஹீரோயின் என்பது படம் வெளியான பிறகு தான் தெரியவரும். இந்த லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
