News
லியோ காஷ்மீர் செட்யூல் நிறைவு.! ஸ்பெஷல் வீடியோ ரெடி…
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, படக்குழு சென்னைக்கு வரவுள்ளார்கள். சென்னையில் வைத்து ஒரு 10 நாட்கள் படப்பிடிப்ப நடத்த படக்குழு திட்மிட்டுள்ளதாம்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் இன்று மாலை 6 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிடவுள்ளதாம். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ஏய் காஷ்மீர், நாங்கள் உன்னை மிஸ் செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 6 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்களேன் – எனக்கும் அந்த மாதிரி பழக்கங்கள் உண்டு…மனம் திறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா.!
இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்க
