Connect with us

News

‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் விஜய்.! வெளியான லியோ வீடியோ…

பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் காஷ்மீரில் ‘தளபதி’ விஜய்யின் LEO படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றும் திரைப்படத்துக்கு ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக ஜனவரி மாதம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. LEO திரைப்படம் சஞ்சய் தத்திற்கு தமிழ் சினிமா அறிமுகத்தை   குறிக்கிறது. படத்தில் அவர்முக்கிய வில்லனாக நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.

தற்போது, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு அசத்தல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, LEO  டப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்துள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ மூலம் தளபதி விஜய்யின் LEO லுக் தெரிந்துவிட்டது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸாக இருக்கிறார் விஜய். தற்போது, விஜய்யின் லுக் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Thalapathy leo look [Image Source: Twitter]

பொதுவாக, ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்களின் லுக் வெளியிடாமல் பொக்கிஷமாக பார்த்து வரும் படக்குழு, இப்பொது அவரது லுக்கின் முழு வீடியோவும் வெளியாகியுள்ளதால் இலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்களேன் – லியோ படப்பிடிப்பிற்கு அதிரா வருகை.! ஹீரோ VS வில்லன் சந்தித்த தருணம்…

Thalapathy leo look [Image Source: Twitter]

மிஷ்கின் சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்த பிறகு, சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளார். பிளாக்பஸ்டர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், படப்பிடிப்பில் தனது அனுபவம் குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top