Connect with us

Celebrities

ஹோட்டலில் மீட் பண்ணலாம்…அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய வரலட்சுமி.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயின், வில்லி என தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் எல்லா கதாபாத்திரங்களும் கலக்கி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மைக்கல் திரைப்படம் கூட ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்றிருந்தது.

KondraalPaavam

KondraalPaavam [Image Source: Twitter]

இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக தமிழில் ” கொன்ரால் பாவம்” என்ற திரைப்படத்தில் சந்தோஷுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனை முன்னிட்டு  படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- பில்லா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

Varalaxmi Sarathkumar

Varalaxmi Sarathkumar [Image Source: Twitter]

இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் காக நடிகை வரலட்சுமி ஊடகத்திற்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக பதில் அளித்தார். அப்போது சினிமாவில் தன்னையும் சில அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக பேசியுள்ளார்.

Varalaxmi Sarathkumar

Varalaxmi Sarathkumar [Image Source: Twitter]

இது குறித்து பேசிய வரலட்சுமி ” ஆரம்ப காலகட்டத்தில் என்னிடம் ஒருவர் ஒரு ஷோவை பற்றி என்னுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது ஷோவை பற்றி பேசி முடித்த பிறகு, அந்த நபர், மற்ற விஷயத்திற்கு நாம் ஹோட்டலில் மீட் பண்ணலாம் என்று சொன்னார்.  இது எனக்கு தப்பாக இருந்தது உடனே நான் அவரிடம் இங்கு இருந்து கிளம்புங்கள் என்று சொன்னேன். சினிமா துறையில் இருக்கும் எனக்கு இந்த நிலைமை வந்தது என்றால் சாதாரண பெண்களுக்கு எவ்ளோ பிரச்சனைகள் ஏற்படும்” என சற்று காட்டத்துடன் பேசியுள்ளார்.

Continue Reading
To Top