News
ரத்தத்தில் கடிதங்கள் வரும் …போட்டோவை டாட்டூ போடுவாங்க…ரசிகர்கள் பற்றி நடிகை ஷெரின்.!!
நடிகை ஷெரினுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவருடைய நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் போது அவருக்கென்று தனி இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இந்நிலையில், நடிகை ஷெரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Sherin Shringar [Image Source : Instagram/@sherinshringar]
இது தொடர்பாக பேசிய நடிகை ஷெரின் “எனக்கு ரசிகர்கள் கூட்டம் வெறித்தனமாக இருந்தது. முக்கியமாக ஆண்கள் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. நான் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு ரத்தத்தில் எழுதிய கடிதங்கள் மற்றும் கையில் என்னுடைய பெயர், என்னுடைய புகைப்படங்களை பச்சை குத்திக் கொண்ட புகைப்படங்கள் என பலவற்றை அனுப்புவார்கள்.

Sherin Shringar [Image Source : Instagram/@sherinshringar]
அந்த மாதிரி ரசிகர்கள் கூட்டம் எனக்கு வெறித்தனமாக இன்றுவரை இருக்கிறார்கள் தான் என்று எனக்கு தோணுகிறது. இப்போது அவர்கள் சோசியல் மீடியாவில் இல்லை சோசியல் மீடியாவை தவிர்த்து பார்த்தால் எனக்கு ரசிகர்கள் கூட்டம் நிறையாக இருக்கிறார்கள். குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் மூலம் பல குடும்ப ரசிகர்கள் அதிகமானார்கள்.

Sherin Shringar [Image Source : Instagram/@sherinshringar]
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். அப்போது நான் வெளியேறியதை பார்த்த ஒரு குழந்தை கதறி கதறி அழுதது. அந்த வீடியோவை அவருடைய அம்மா எனக்கு அனுப்பினார். உடனடியாக எனக்கு மனதே கலங்கிவிட்டது. அழுகவே செய்துவிட்டேன். அந்த குழந்தையை எப்படி சமாதானம் செய்வது என்றே எனக்கு தெரியவில்லை.

Sherin Shringar [Image Source : Instagram/@sherinshringar]
இதையும் படியுங்களேன்- அவரு ரெடி தான்…நான் தான் ரெடி இல்லை…விஜய் படம் குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்…
பிறகு கவலைப்படாதடா செல்லம் நான் உனக்காக வைல்ட் கார்ட் ரவுண்டில் வருகிறேன் என கூறினேன். இந்த மாதிரி மக்களின் பேரன்பை சம்பாதித்ததற்கு நான் போன ஜென்மத்தில் எதாவது புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறன்” என எமோஷனலாக ஷெரின் பேசினார்.
