News
ஆத்தாடி ‘லிப் லாக்’ காட்சியா.? கணவர் கிட்ட யார் பதில் சொல்லுறது.? பதறும் பிரியாமணி.!
நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை பிரியாமணி கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஷ்டடி திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜான் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Priyamani [Image Source : Twitter /@re_ddy_kb]
ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக மட்டுமே நடித்து அந்த இவர் சமீப காலமாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடித்த வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சிகள் இருக்கிறார்கள். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியாமணியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

Priyamani [Image Source : Instagram/@pillumani]
அந்த கேள்விகளுக்கு நடிகை பிரியாமணியும் மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அந்த பேட்டியில் நீங்கள் படுக்கையறை முத்தக்காட்சிகளில் எதற்காக நடிப்பீர்களா..? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த பிரியாமணி ” நான் முத்தக்காட்சி (லிப் லாக்) படுக்கையறை காட்சிகளில் நடிக்கவே மட்டேன். நான் திருமணம் முடிந்ததற்கு பிறகும், அதற்கு முன்பு அந்த மாதிரி கட்சியில் நான் நடித்ததே இல்லை. திருமணம் முடிந்த பிறகு அந்த மாதிரி காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் தெளிவாக கூறிவிட்டேன்.

Priyamani And Mustafa Raj [Image Source : Twitter /@telugubit]
அந்த மாதிரி காட்சியில் படங்களில் நடிக்கமாட்டேன் என்று. இதனால் நான் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தவறவிட்டிருக்கிறேன். நான் படங்களில் நடிக்கும்போது முத்தக்காட்சியில் நடிக்கவே கூடாது. ஏனென்றால், அதற்கு என்னிடம் அனுமதி கிடையாது. அப்படி நடிப்பது படங்களுக்காக தான் என எனக்குத் தெரியும். ஆனால் அப்படி நடித்தால் என்னுடைய கணவருக்கு பதில் சொல்லியாக வேண்டும் .

Priyamani [Image Source : Instagram/@pillumani]
இதையும் படியுங்களேன்- 18 வயதிலே குழந்தை 3 முறை தற்கொலை செய்துகொள்ள நினைத்த நடிகை ரேகா.! வெளியான பகீர் தகவல்…!
என்னுடைய கணவருக்காக நான் அப்படி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன். கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல நடிக்கும் காட்சிகளில் பட வாய்ப்புகள் வந்த அதில் நடிப்பேன். அதை தவிர மற்ற காட்சிகள் கொண்ட படம் வந்தால் நடிக்கவேமாட்டேன். என்னுடைய குடும்பங்கள் படத்தை பார்ப்பார்கள் எனவே நான் அப்படியெல்லாம் நடித்தால் சங்கடமா இருக்கும் ‘ என நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.
