News
லோகேஷ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்…மனம் திறந்த கௌதம் மேனன்.!
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

leo vijay movie [Image Source: Twitter]
இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து விரைவில் படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

Gautham Vasudev Menon [Image Source : Google]
இதற்கிடையில், லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இயக்குனர் கெளதம் மேனன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் லியோ படம் பற்றி கேள்வி கேட்டதற்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.
இதையும் படியுங்களேன் – ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளமா..? லட்சங்களை அள்ளிய ஆர்யா மனைவி.!

leo update by GVM [Image Source : Google]
லியோ படம் குறித்து பேசிய அவர் ” லியோ திரைப்படத்தின் படபிடிப்பு படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததை தொடர்ந்து விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. லியோ’ படத்தோட அப்டேட் பத்தி
கேப்பாங்க, எதுவும் சொல்லிடாதீங்கன்னு லோகேஷ் கனகராஜ் என்னிடம் கூறினார். லோகேஷ், ரொம்ப ஸ்ட்ரிக்ட். கட்டாயப்படுத்தி அப்டேட் கேட்டால் கூட, ஷூட்டிங் நல்லா இருந்ததாக சொல்லுங்க என கூறினார்.
