Connect with us

News

தளபதி விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் நன்றி.! பிறந்தநாள் கொண்டாட்டம்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2017-ல் சந்தீப் கிஷன் மற்றும் ஸ்ரீ நடித்த ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் கார்த்தி நடித்த ‘கைதி’ என்ற இரண்டாம் திரைப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.

Lokesh Kanagaraj birthday celebration pics

Lokesh Kanagaraj B’Day Party [Image Source : Twitter]

சினிமாவுக்கு அறிமுகமாகி ஆறு வருடங்களுக்குள், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். லோகேஷ் கனகராஜூக்கு இன்று 37 வயதாகிறது, ஒரு பக்கம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இணையத்தில் வலது தெரிவித்து வர, மறுபக்கம் அவரது அடுத்த படமான தளபதி விஜய்யின் ‘லியோ’ படக்குழுவினர் காஷ்மீரில் அவருக்கு பிரமாண்டமான பிறந்தநாள் விழாவை  கொண்டாடினர்.

Lokesh Kanagaraj birthday celebration pics

Lokesh Kanagaraj B’Day Party [Image Source : Twitter]

மேலும், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் என படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் பார்ட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Lokesh Kanagaraj birthday celebration pics

Lokesh Kanagaraj B’Day Party [Image Source : Twitter]

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்க்கு ஸ்பெஷல் நன்றி சொல்லியுள்ளார்.

இதையும் படிங்களேன் –  Video: அட இது நம்ம அமலா பாலா? கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம்…

 

மேலும், அவர் தனது ரசிகர்களை மறந்துவிடவில்லை.   தனது டிவிட்டர் பக்கத்தில், “நன்றி போதுமானதாக இருக்காது, இன்னும் அனைத்து மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் அனைத்து மாஷ்அப்கள், ரசிகர் பக்கங்களுக்கு ஒரு பில்லியன் நன்றி. இது என்னை அதிக பொறுப்பாக்கி, மக்களை மகிழ்விப்பதில் என் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்துவேன் அனைவருக்கும் நன்றி என்று  குறிப்பிட்டு இருந்தார்.

Continue Reading
To Top