News
காமத்தில் தான் காதல் ஆரம்பிக்கும்… ஓப்பனாக பேசிய நடிகை ஷகீலா…
பிரபல நடிகையான ஷகீலா சமீபத்திய பேட்டி ஒன்றில் ” காதல் என்பது காமத்தில் தான் ஆரம்பிக்கும் காமத்தில் தான் முடியும். அது எப்படி என்றால் நான் இப்போது ஒரு நபரை பார்க்கிறேன் என்றால் அவன் அழகாக இருக்கிறான் என்று முதலில் பார்ப்போம். பிறகு அவனை முத்தம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்போம். நம்மளுடைய மனதில் அவன் நம்மளை கட்டி அணைத்தால் எப்படி இருக்கும் என்று தோணும் கண்டிப்பாக எல்லாருக்குமே தோணும்.

shakeela [Image Source : Instagram/@imshakila_official]
அப்படியெல்லாம் தோணாது என்று ஆர்டிஸ்ட் போன்று நடித்தீர்கள் என்றால் நான் ஒத்துக்கவே மாட்டேன். எல்லா பெண்களுக்கும் தோணும். ஒரு நபர் என்று கிடையாது சூர்யாவாக இருக்கலாம் விஜயாக இருக்கலாம், அஜித்தாக இருக்கலாம் அப்படி தோணுவது தான் காமம்” என வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

shakeela [Image Source : Instagram/@imshakila_official]
மேலும் தொடர்ந்து பேசிய ஷகீலா சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்மென்ட் குறித்தும் பேசியுள்ளார். ” இது குறித்து பேசிய ஷகீலா “பணம் கொடுத்து நடிக்க வைக்கிறேன் என்பது சினிமாவில் கடந்த 15 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம், பார்த்தீர்கள் என்றால் ஹீரோக்கள், ஹீரோயின்கள் மிகவும் மொக்கையாக இருப்பார்கள்.

shakeela [Image Source : Instagram/@imshakila_official]
அப்படி அவர்களை பார்க்கும்போது நமக்கு தெரிந்துவிடும். எனக்கு அப்படியே எதுவும் நடக்கவில்லை. ஆனால், பெண்களை அட்ஜஸ்ட்மென்ட் சொல்லி ஏமாற்றி உறவு வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றிய நிறைய பேர் எனக்கு தெரியும் அது மிகவும் தவறான ஒரு செயல் அது மிகவும் பாவமான ஒரு விஷயம். ஏனென்றால் ஒரு பெண்ணுடைய இஷ்டம் இல்லாமல் அதற்கு ஹீரோயினாக ஆசை காட்டி ஏமாற்றுவது மிகவும் மோசமான செயல்” என கூறியுள்ளார்.
