News
மேடம் நீங்க ரொம்ப….மேடையில் கீர்த்தி சுரேஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப்…
லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் தற்போது தனது அடுத்த படத்தின் கதை எழுதும் பணிகளிலும் அடுத்ததாக நடிக்கும் படங்களிலும் நடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், பல பெரிய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வருகின்றனர்.

KeerthySuresh and PradeepRanganathan [Image Source : File Image ]
அந்த வகையில், மாமன்னன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரதீப் ரங்கநாதனை பட குழு அழைத்திருந்தது. அந்த விழாவின் மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி சுரேஷை சற்று அதிரவைத்ததுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

keerthy suresh Pradeep Ranganathan [Image Source : File Image ]
மேடையில் பேசிய பிரதீப் ” நான் கீர்த்திசுரேஷை ஒருமுறை மும்பையில் சந்தித்தேன். ஆனால், அந்த சமயம் அவருடன் பேச முடியவில்லை. இன்று எனக்கு பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லார் முன்னாடியும் சொல்கிறேன். மேம் “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்” என கூறியுள்ளார். இதனை பார்த்த கீர்த்தி சற்று வெட்கத்தில் சிரித்துக்கொண்டார்.
#pradeepranganathan next Keerthi Suresh ah patham pakkanum dapic.twitter.com/00OFbQHKwN
— ???????????????????????? (@Harish007_) June 28, 2023
இதையும் படியுங்களேன் – நிறைய தப்பு பண்ணி இருக்கேன்…நீ அந்த தப்ப பண்ணாதமா..மகளுக்கு அட்வைஸ் கொடுத்த ரோபோ சங்கர்..
பிரதீப் பேசிய இந்த வீடியோவை எடிட் செய்து வீடியோ முடிவில் பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி சுரேஷ் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியவுடன் எஸ் ஜே சூர்யா முறைத்து பார்ப்பது போலவும் அதற்கு ஸ்பைடர் படத்தின் பிஜியம் போட்டு எடிட் செய்து நெட்டிசன்கள் வீடியோவை பரப்பி வருகின்றனர். மேலும் பிரதீப் ரங்கநாதன் அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
