Connect with us

News

ரஜினி மகள் வீட்டில் நகைகளை திருடி ஓஎம்ஆரில் நிலம் வாங்கிய பணிப்பெண்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த விலை உயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது இந்த விசாரணையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்த ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Aishwarya Rajinikanth pongal celebration

Aishwarya Rajinikanth pongal celebration [Image Source: Twitter]

ஆம்… கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அடிக்கடி பெரிய தொகை கொண்ட பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது. விசாரணைக்காக தம்பதியர் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது, 2019 முதல் 60 சவரன் நகைகளை சிறிது சிறிதாக திருடி பணமாக மாற்றியதை அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவுக்கு சென்னையில் பல வீடுகள் உள்ளதாம்.

Rajinikanth and Aishwarya Rajinikanth take a selfie

Rajinikanth and Aishwarya Rajinikanth take a selfie. [Image Source: Twitter]

ஐஸ்வர்யா தனது புகாரில், கடைசியாக 2019 ஆம் ஆண்டு தனது சகோதரி சௌந்தர்யாவின் திருமணத்திற்காக நகைகளை அணிந்ததாகவும், அதன் பிறகு லாக்கரை திறக்கவே இல்லை என்றும் கூறியிருந்தார். சாவிகள் அவரது செயின்ட் மேரிஸ் ரோடு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், லாக்கரே தனுஷுடன் வசித்து வந்தபோது, சென்னை மந்தைவெளியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு மாற்றப்பட்டது.

இதையும் படிங்களேன் – சிவாஜி கணேசன், கவுண்டமணி உள்ளிட்டோருக்கு குரல் கொடுத்த கோவை குணா காலமானார்.!

விவாகரத்துக்குப் பிறகு, லாக்கர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு மாற்றப்பட்டது. இப்படி, பலத்த பாதுகாப்புடன் இருந்தும் வீட்டு வேலைக்கார பெண் துணிச்சலாக திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பணிப்பெண் ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யா வீட்டில் திருடி சென்னை ஓஎம்ஆரில் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனராம். இப்போது வரைக்கும் சுமார் 20 சரவண் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாம்.

Continue Reading
To Top