News
என்றும் வாடாத மல்லிப்பூ.! யூடியூபில் மில்லியன் சாதனை….
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம், கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படத்தில் சிம்பு தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை சித்து இத்தானி நடித்திருந்தார். மேலும், இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்ததது. குறிப்பாக, படத்தில் ஏ.ஆர் ரகுமானின் இசை படத்தை ஒரு படி மேலே எடுத்து சென்றது.
இதையும் படிங்களேன் – போர்வீரனாக களமிறங்கும் சிம்பு…ஜோடியாக நடிக்க 3 ஹீரோயின்கள்.! ‘STR48’ லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
அதிலும், “மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே” பாடல் சூப்பர் ஹிட் ஆனது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனம் ஆடிய இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சிம்பு நடித்த படத்திலேயே இதுவே அதிக பார்வைகளை கொண்ட பாடல் என்றே சொல்லலாம்.
