Connect with us
mansoor ali khan jail

News

சிறைக்கு சென்ற மன்சூர் அலிகான்…போலீஸ் கெட்டப்பில் சென்று அதிர வைத்த அந்த சம்பவம்…

ஒரு காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து  கலக்கி வந்த நடிகர் தான் மன்சூர் அலிகான்.  இவருடைய நடிப்பையும் தாண்டி அவருடைய பேச்சுக்கும் இவருடைய செய்கைகளுக்கு  ரசிகர்கள் பலர் உள்ளனர் என்று கூறலாம். குறிப்பாக இவர், லோகேஷ் கனகராஜ் மூலம் இன்னும் பிரபலமாகி விட்டார்  என்றே கூறலாம். ஆம் லோகேஷ் இவரை பிடிக்கும் அவர் செய்யும் விஷயங்கள் பிடிக்கும் என்று கூறியவுடன் மன்சூர் அலிகானின் பழைய வீடியோக்கள் கூட வைரலாக தொடங்கியது.

mansoor ali khan

mansoor ali khan [Image Source : File Image ]

இந்நிலையில், மன்சூர் அலிகான்நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தும் , நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.  குறிப்பாக அவர் தற்போது விஜய் நடித்துவரும் லியோ  திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இதற்கிடையில். நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் பல முறை சிறைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

bayilvan ranganathan

bayilvan ranganathan [Image Source : File Image ]

இது குறித்து பேசிய  பயில்வான் ரங்கநாதன் ” மன்சூர் அலிகான் ஆள் பார்ப்பதற்கு தான் ஒரு மாதிரி வில்லன் போல் இருப்பார். அடிக்கடி சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசி மாட்டிக் கொள்வார். சில சமயங்களில் அவர் கோர்ட்டிலும் கூட அபராதம் கட்டியுள்ளார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து கொண்டே தான் வருகிறார்.

mansoor ali khan

mansoor ali khan [Image Source : File Image ]

ஒருமுறை ஒரு விசாரணைக்காக அவரை ராயபுரம் காவல் துறையினர் வர சொல்லினார்கள்.  அதற்கு  மன்சூர் அலிகான் போலீஸ்கெட்டப் போட்டுக்கொண்டே விசாரணைக்கு சென்று அதிரவைத்தார்.  அதுவும் ஒரு வழக்காக மாறியது. இப்படி நிறைய வழக்கு விஷயங்களில் சம்பந்தப்பட்டு சிறைக்கு சென்று திரும்பியவர் தான் மன்சூர் அலிகான் ” என பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ளார். மன்சூர் அலிகான் பற்றி பயில்வான் ரங்கநாதன் இப்படி கூறியுள்ளது சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

Continue Reading
To Top